அஜீத், விஜய் படம் - வேற காரணம் இல்லை! "
கெளதம் மேனன் - விஜய் இணைப்பில் உருவாக இருந்த ' யோஹன் ' திரைப்படம் கைவிடப்பட்டது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய்யின் வித்தியாசமான கெட்டப்போடு விளம்பரங்கள் எல்லாம் வெளிவந்தது. ஆனால், விஜய் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார்.
அஜீத்தோடு இணைந்து 'துப்பறியும் ஆனந்த்' துவங்க இருப்பதாக இருந்தது.. ஆனால் அப்படத்தையும் அவர் தொடங்கவில்லை.
இதுகுறித்து இயக்குனர் கெளதம் மேனன் தெரிவித்திருப்பது " 'துப்பறியும் ஆனந்த்’ 1920-கள்ல நடக்கும் கதை. அதுக்கான ஸ்க்ரிப்ட் வேலைகளுக்கே கிட்டத்தட்ட ஒரு வருஷம் தேவைப்படும். இப்போ அதுக்கான நேரம் இல்லை. அதனால அஜித்துடன் படம் பண்ண முடியலை.
சூர்யாவை வெச்சுப் பண்ணலாம்னு 2013 மார்ச்ல இருந்து அவர்கிட்ட டேட்ஸ் வாங்கி அட்வான்ஸும் கொடுத்துட்டேன். ஆனா, 'துப்பறியும் ஆனந்த்’ ஸ்க்ரிப்ட் இல்லை. ஆக்ஷனும் காதலும் கலந்த ஒரு ஸ்க்ரிப்ட் அவருக்காக பண்ணிட்டு இருக்கேன்.
' யோஹன் ’ முழுக்க முழுக்க ஆக்ஷன் படம். 'எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா, ரொம்ப இங்கிலீஷ் டைப் படமா இருக்கு. இன்னும் நம்ம ஸ்டைல் சேர்த்து கொஞ்சம் தமிழாப் பண்ணலாம்’னு சொன்னார் விஜய்.
அதனால அந்தப் படம் பண்ண முடியலை. இப்போ அதே ஸ்க்ரிப்ட்ல மகேஷ்பாபுவை வெச்சு தெலுங்கு, தமிழ், இந்தினு மூணு மொழியிலும் ' யோஹன் ’ பண்றேன். இதைத் தவிர அஜித், விஜய்கூட படம் பண்ணாததுக்கு வேற எந்தக் காரணமும் இல்லை!'' என்று தெரிவித்து இருக்கிறார்.
source:CV
No comments:
Post a Comment