ரஜினி கிருஷ்ணரா..?
ரஜினி கிருஷ்ணரா..?!
இந்தியில் அக்ஷய்குமார் தயாரிப்பு, நடிப்பில் வெளியான படம் 'Oh my God'.
இப்படத்தினை பார்த்த ஐஸ்வர்யா தனுஷ் அப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய
முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் அக்ஷய்குமாரை சந்தித்த
ஐஸ்வர்யா இதுகுறித்து பேசி இருக்கிறார். 'ஒ மை காட்' படத்தினை வேறு
நிறுவனங்களுடன் இணைந்து அக்ஷய்குமார் தயாரித்து இருப்பதால் ரீமேக் உரிமை
பற்றி யாரிடம் பேச வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொண்டாராம்.
"
கடவுளை நம்பாத பரேஷ் ராவல் ஒரு பிரச்னையில் சிக்குகிறார். அவரை காப்பாற்ற
கிருஷ்ணர் (அக்ஷய் குமார்) பூமிக்கு வருகிறார் " இதுதான் ஒ மை காட்
படத்தின் கரு.
அக்ஷய்குமார் நடித்த கிருஷ்ணர் வேடத்தில் தனது அப்பா
ரஜினியை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறாராம் ஐஸ்வர்யா தனுஷ். படம்
முழுக்க மூட நம்பிக்கைகளை தோலுரிக்கும் வசனங்கள், போலி சாமியார்களை
தாக்கும் காட்சிகள் என விரிகிறது திரைக்கதை.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம்.
source:CV
No comments:
Post a Comment