ரஜினி + ராஜமௌலி ?!
கோச்சடையான் ' படத்தினைத் தொடர்ந்து ரஜினியின் அடுத்த படம் எதுவாக இருக்கும் என்பது தான் ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பு.ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், கே.வி.ஆனந்த், 'நான் ஈ' ராஜமௌலி.. என ஒரு யூகத்தின் அடிப்படையில் நீண்ட பட்டியலே இருக்கிறது.
இது குறித்து ரஜினிக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது " ரஜினி இப்போதைக்கு கோச்சடையான் படத்தில் தான் முழுகவனம் செலுத்தி வருகிறார். அவரது உடல்நலம் பழைய நிலைமைக்கு திரும்பி இருக்கிறது.
தற்போது முன்பை விட பெரும் உற்சாகத்தில் இருக்கிறார். 'நான் ஈ' படத்தினைப் பார்த்துவிட்டு இயக்குனர் ராஜமெளலியிடம் நீண்ட நேரம் பேசினார். அப்போது தனக்கு ஒரு கதை ஒன்றை தயார் செய்யுமாறு தெரிவித்து இருக்கிறார்.
பிரபாஸ் நடிக்கும் படத்தினை முடித்து வெளியிட்ட பின் ரஜினி படத்திற்கான வேலைகள் தொடங்குவார் ராஜமெளலி" என்று தெரிவித்தார்கள்
No comments:
Post a Comment